பார்த்திபன் கனவு

ஒரு IT நிறுவனத்தில் Team Lead-ஆக வேலை பார்க்கும் பார்த்திபன், தன் மனைவி சீதாவுடன் அமைதியாக வாழ்ந்து வருகிறான். ஆனால் அவன் மனதுக்குள் அமைதியில்லாமல் இருக்க காரணமாக அமைகிறான் அவனுடைய project-ல் வேலை செய்யும் அஷ்வின். பார்த்திபன் தான் ஒரு closet gay என்ற ரகசியத்தை பொத்தி பொத்தி காக்கிறான். ஆனால் அஷ்வின் தான் ஒரு gay என்பதில் மிக வெளிப்படையாக இருக்கிறான். இருவருக்கும் நடுவே ஈர்ப்பு ஏற்பட, பார்த்திபன் தனக்குள் இருக்கும் homophobia-வால் புழுங்குகிறான். ஏற்கனவே பல முறை இதயம் நொறுங்கிய அனுபவம் பார்த்திபனை மேலும் துன்பத்துக்கு ஆளாக்குகிறது. கடைசியில் என்ன நடக்கிறது?

நடிகர்கள்: பார்த்திபன், அஷ்வின் குமார், அர்ணாவ் அஹமத், சீதா

பா.க 01 பயப்படுறியா குமாரு?
தொடர்கதைகள்

பா.க 01 பயப்படுறியா குமாரு?

சீதா புதிய துணிகளின் வாசனை மிகுந்த floral tops-ளையும், polythene cover-ல் இருந்த புடவைகளையும் bill போடுவதற்காக கீழ் floor-க்கு போக நடக்கிறாள். பார்த்திபன் அவளிடம் இருந்து சில துணிகளை வாங்கிக்கொண்டு அவளை தாண்டி நடக்கிறான். சீதா lift-க்கு நெருங்கியபோது ஏற்கனவே ஒரு பெரிய பெண்கள் கூட்டம் நின்றுக்கொண்டிருக்க, பார்த்திபன் துணிகளை எடுத்துக்கொண்டு படியை நோக்கி நடந்தான்.

பா.க 02 முகமூடி
தொடர்கதைகள்

பா.க 02 முகமூடி

பார்த்திபன் தன் laptop-ஐ switch on செய்துவிட்டு, தன் WhatsApp செய்திகளை மேய ஆரம்பித்தான். தனது Project Group-ல் இருந்து இன்னும் அஷ்வினை நீக்காததால் அவனுக்கு வந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் Whatsapp group-ஐ நிரப்பியிருந்தன. பார்த்திபனுக்கு அஷ்வின் தன் attention-ஐ எதிர்பார்த்து நடந்துக்கொண்ட நிகழ்வுகள் கண் முன் வந்து சென்றன.

பா.க 03 காமக் Chemistry…
தொடர்கதைகள்

பா.க 03 காமக் Chemistry…

உள்ளே போன coffee பார்த்திபனுக்கு கொஞ்சம் உற்சாகம் கொடுக்க, அவன் மீண்டும் தன் இருக்கைக்கு வந்து laptop-ஐ திறந்த போது Outlook notification அடுத்த meeting-க்கு இன்னும் 5 நிமிடம் இருப்பதாக நினைவூட்டியது. பார்த்திபன் கொஞ்ச நேரம் கழித்து MS Teams-ல் இணைந்தான். இன்றைய meeting-ல் Project manager தான் updates கொடுக்கப்போகிறார் என்பதால் பார்த்திபனுக்கு preparations எதுவும் இல்லை.

பா.க 04 நீரும் நெருப்பும்…
தொடர்கதைகள்

பா.க 04 நீரும் நெருப்பும்…

புதிதாக இழவு விழுந்த வீடு போல இறுக்கமான சூழலில் பார்த்திபன் அம்மாவின் சத்தமான விசும்பல் சத்தம் அமைதியை கலைத்தது. பன்னிரெண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள் வந்த பல வீடுகளில் இது தான் தற்போதைய நிலைமை என்ற போதும் பார்த்திபன் வீட்டில் சோகம், கோபம் எல்லாம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. தன் மகன் முதல் ஐந்து வரிசையில் வருவான் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த பார்த்திபனின் அம்மாவுக்கு, அவன் எல்லா பாடங்களிலும் “just pass” ஆனது தாங்கிக்கொள்ள முடியாத அதிர்ச்சியாக இருந்தது.

பா.க 05 Lecturer அண்ணா love…
தொடர்கதைகள்

பா.க 05 Lecturer அண்ணா love…

பார்த்திபன் சீதாவிடம் “கொஞ்சம் வேலை இருக்கு… நீ போய் படுத்துக்கோ… நான் வேலை முடிச்சிட்டு வந்து தூங்கிக்கிறேன்” என்று டம்ளரை அவளிடம் கொடுத்தான். சீதா “ம்ம்… ரொம்ப நேரம் கண் முழிக்காதீங்க” என்று பார்த்திபனின் தலையை செல்லமாக கோதிவிட்டு நகர்ந்தாள். அவளது தீண்டல் பார்த்திபனுக்கு ஏதோ குற்ற உணர்ச்சியை தட்டியெழுப்பியது.

பா.க 06 பட்டினி கிடந்தவனுக்கு பிரியாணி
தொடர்கதைகள்

பா.க 06 பட்டினி கிடந்தவனுக்கு பிரியாணி

பார்த்திபன் தன் laptop-ல் presentation-ஐ கடைசி நிமிட மாறுதல்களை செய்தபடி, திரையில் இருந்து கண்ணெடுக்காமல் “Everybody assemble in the conference room without delay… client is the stickler for punctuality” என்று coffee break-க்காக கலைந்து செல்லும் சக ஊழியர்களிடம் சொல்ல, “OK பார்த்தி” என்று நொடியில் காணாமல் போனார்கள்.

பா.க 07 பேராசிரியருக்கே பலான பாடம்…
தொடர்கதைகள்

பா.க 07 பேராசிரியருக்கே பலான பாடம்…

அஷ்வின் தனியாக cafetaria-வில் உட்கார்ந்து coffee குடித்துக் கொண்டிருக்கிறான். மீண்டும் project-ல் சேர்ந்த முதல் நாள் தருண் ஏற்படுத்திய பிரச்சனையால் மற்றவர்கள் அஷ்வினிடம் பெரிதாக ஒட்டுவதில்லை. அஷ்வின் ஏற்கனவே இந்த project-ல் இருந்த போதும் யாருடனும் வலிய போய் பழகாததால், அவனுக்கு இந்த ‘தனிமை’ ஒரு பெரிய விஷயமாக படவில்லை.

பா.க 08 என்னை இழு இழுவென இழுக்குதடி…
தொடர்கதைகள்

பா.க 08 என்னை இழு இழுவென இழுக்குதடி…

ரத்த வெள்ளத்தில் கிடக்கும் தருணை ஏற்றிக்கொண்டு ambulance நகரத்து போக்குவரத்தில் சாலை விதிகளை மீறியபடி சீறிப்பாய்கிறது. உள்ளே இருந்த Paramedics-களுடன் அஷ்வினும், பார்த்திபனும் உட்கார்ந்திருக்கிறார்கள். தரையில் கிடந்த தருணை தூக்குவதற்கு உதவி செய்ததால் அஷ்வினுடைய சட்டையில் ஏற்பட்ட ரத்தக்கறைகளை அவன் சட்டை செய்யாமல், தருணை தொட்டு தொட்டு பார்த்துக்கொண்டிருந்தான்.

Free Sitemap Generator
Scroll to Top