| தலைப்பு | |||||||||||
| மொழி | |||||||||||
| வெளியான வருடம் | |||||||||||
| நடிகர்கள் | |||||||||||
| இயக்குனர் | |||||||||||
| கதைச்சுருக்கம் | |||||||||||
| இரு காதலர்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்தித்துக்கொள்வதாக பிரிகிறார்கள். ஆனால் அவர்கள் அந்த இடத்துக்கு மீண்டும் குறித்த நேரத்தில் வரமுடியாதபடி சந்தர்ப்ப சூழ்நிலை வில்லனாகிவிடுகிறது. ஒருவர் மற்றவரை தொடர்பு கொள்ள தேவையான முகவரியோ இல்லை தொலைபேசி எண்ணோ இல்லாத காரணத்தால் அவர்கள் ஒரேயடியாக பிரிந்து போய்விடுகிறார்கள். பின்னர் விதிவசப்படி பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சேர்கிறார்கள். இது ஒரு வழக்கமான காதல் கதை போல இருக்கிறது அல்லவா? தமிழில் கூட நாம் “ஜே! ஜே!”, “உனக்கு 18 எனக்கு 20”, “தித்திக்குதே” மாதிரியான படங்களை பார்த்திருக்கிறோமே. அதை காதலர்கள் இருவரும் ஆண்கள் என்று மாற்றி, காட்சிகளை கொஞ்சம் கூடுதல் அழகியலோடு சேர்த்தால் இத்தாலிய படமான “Nuovo Olimpo” ரெடி! கதைக்களம் 1978-ல் ஆரம்பிக்கிறது. ரோம் நகரத்தின் நடுவில் அமைந்துள்ள “Nuovo Olimpo” திரையரங்கம் க்ளாஸிகல் படங்களோடு சேர்த்து ஓரினச்சேர்க்கையாளர்களின் கூடும் இடமாகவும் அமைகிறது. பொதுவாக அவர்கள் தங்கள் இணைகளை திரையரங்கத்தில் பிக்கப் செய்து அங்குள்ள கழிப்பறையில் செக்ஸ் வைத்து குஜால்ஸாக இருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு திரையரங்கத்தில் நமது கதாநாயகர்கள் சந்திக்கிறார்கள். ரோமில் படப்பிடிப்பு நடத்த வரும் திரைப்பட outdoor unit-ல் துணை இயக்குனராக பணிபுரியும் எனியா-வும், மருத்துவம் படிக்கும் பியட்ரோ-வும் (Andrea Di Luigi) ஒரு நாள் “Nuovo Olimpo” திரையரங்கத்தில் சந்திக்கிறார்கள். தங்கள் காம இச்சையின் வடிகாலுக்கு துணை தேடி வராமல் ஓடும் Classic திரைப்படத்தை பார்க்க வந்திருப்பது இருவரையும் இணைக்கிறது. கூடவே ஈர்ப்பும் வருகிறது. கழிப்பறைக்கு செல்லும் பியட்ரோவை பின்தொடரும் எனியா அவனை “approach” செய்ய, பியட்ரோ தான் எனியா மீது காதல் வயப்பட்டுவிட்டதாகவும், அவர்களது முதல் உடலுறவு இப்படி அவசரமாக, கழிப்பறையில் நடக்காமல் “special” ஆன இடத்தில் நடக்கவேண்டும் என்று சொல்கிறான்.
பெரிய எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லாமல் இதை Netflix-ல் subtitles போட்டு பாருங்கள். வழக்கமாக கதைகள் எல்லாம் dark ஆக, மனதில் பாரம் ஏற்றும் விதமாக இருக்கும்போது இந்த ஓரினக்காதல் கதை எளிதாகவும், அழகாகவும் இருப்பது ஒரு மாறுதலை கொடுக்கும். குறிச்சொற்கள்: ஓரினக்காதல் <--- முற்றும் ---> இந்த கதை பிடிச்சிருந்ததா? அடுத்து ஏதாவது இன்னொரு கதை படிக்கலாமா?
|
|||||||||||
<--- முற்றும் --->
இந்த கதை பிடிச்சிருந்ததா? அடுத்து ஏதாவது இன்னொரு கதை படிக்கலாமா?
| Feedback |
| எழுதின எனக்கு objective-ஆ பார்க்கமுடியாது... படிச்ச உங்களுக்கு கதை எப்படி இருந்தது என்று உங்களோட கருத்துக்களை மறக்காமல் Comments-ல் போடவும். |
|
கதை எப்படி இருக்கு? |



