Reception-ல் இருக்கும் பெண் எதுக்கு இவ்வளவு low neck போட்டுக்கொண்டு தன் cleavage-ஐ அப்பட்டமாக காட்டிக்கொண்டிருக்கிறாள் என்று ஸ்வேதாவின் யோசனையை “Hi… Good Morning… may I know why you are here today” என்ற அவளுடைய நுணி நாக்கு ஆங்கிலம் கலைத்தது. ஸ்வேதா தயக்கத்துடன் “I am Swetha… நான் பிருத்வியை…. உங்க Country Head-ஐ பார்க்கனும்” என்று சொல்ல, அந்த receptionist ஸ்வேதாவை ஒரு மாதிரியாக பார்த்தாள். ஸ்வேதாவின் எளிமையான உடையும், அவள் பார்க்க விரும்பு நபரின் தகுதியும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசத்தில் இருந்தது. “ஹாங்! Does he know that you’ll be here today?” என்ற receptionist-ன் கேள்விக்கு ஸ்வேதா தயக்கமாக இல்லை என்று தலையசைத்தாள். அதை கவனித்த receptionist “Else do you know each other?” என்று கேட்க, ஸ்வேதா தான் நிற்பது பிருத்வியின் அலுவலகம் என்பதால் “ஆமாம்… we were colleagues earlier” என்று நாசூக்காக பதிலளித்தாள்.
Receptionist ஸ்வேதாவிடம் “Please take your seat” என்று இருக்கையை காட்ட, ஸ்வேதா அந்த விலையுயர்ந்த sofa-வின் நுணியில் பதற்றத்தோடு உட்கார்ந்தாள். Receptionist Intercom-ல் எண்களை நளினமாக ஒத்தி “Prithvi! Someone is here for you…” என்றாள். “ம்ம்…” என்றபடி அவள் ஸ்வேதாவை நிமிர்ந்து பார்த்து “She is Swetha..” என்று சொன்னதில் இருந்து ஸ்வேதாவுக்கு எதிர்பக்கத்தில் என்ன கேள்வி வந்திருக்கும் என்று புரிந்தது. இப்போது அவன் தன்னை பார்க்க வருவானா இல்லை மாட்டானா என்று அவளது இதயம் சத்தமாக துடிதுடித்தது. அவள் “OK! Prithvi, Bye” என்று அழைப்பை துண்டித்துவிட்டு ஸ்வேதாவிடம் “He’ll be here in 10 minutes” என்று சொன்னபோது ஸ்வேதாவின் மனதில் சந்தோஷம் பொங்கியது. ஆனால் பிருத்வி பத்து நிமிஷத்துக்கு பதிலாக ஒரு மணி நேரம் ஸ்வேதாவை காக்க வைத்துவிட்டு தான் வந்தான். அன்று ஹோட்டலில் நடந்த சண்டையை தொடர்ந்து கோபத்தில் இருக்கும் பிருத்வி கிட்டத்தட்ட இரண்டு மாதத்துக்கும் மேலே தன் அழைப்பை எடுக்காமல், செய்திகளுக்கு பதிலளிக்காமல் தவிர்ப்பதால் வேறு வழியின்றி இன்று முன்னறிவிப்பு இல்லாமல் அவன் அலுவலகத்துக்கு வரவேண்டி இருக்கிறது. இன்றாவது அவன் கோபம் குறைந்து தன்னை மன்னித்து இயல்பாக பேசுவானா என்று ஏக்கத்துடன் ஸ்வேதா பதைபதைப்புடன் இருந்ததால் நேரம் வழக்கத்தை விட Slow motion-ல் நகர்வதாக தோன்றியது. ரொம்ப நேரம் கழித்து பிருத்வி வந்தான். ஸ்வேதா அவன் தன்னை பார்த்ததும் அப்படியே அலேக்காக தூக்கி தட்டாமாலை சுற்றவேண்டும் என்றெல்லாம் எதிர்பார்க்கவில்லை என்றாலும், ஒரு புன்னகையாவது புரிவான் என்று நினைத்த ஸ்வேதாவுக்கு பிருத்வி நேராக receptionist-டம் சென்று “யாஷிகா! Thanks… for the next 15 minutes tell anyone who calls me that I had gone for a smoke” என்று உரிமையுடன் யாஷிகாவின் கையை அழுத்திவிட்டு சொன்னது ஸ்வேதாவுக்கு இன்னும் கஷ்டமாக இருந்தது. பிருத்வி அலுவலகத்து வாசலை நோக்கி நடக்க, ஸ்வேதா எழுந்து ஓட்டமும் நடையுமாக அவனை பின்தொடர்ந்தாள். இருவரும் வெளியே சாலையில் இறங்க, பிருத்வி ஸ்வேதாவை கண்டுக்கொள்ளாமல் சிகரெட் ஒன்றை பற்றவைத்தான். ஸ்வேதா அவனை நெருங்கி “பிருத்வி! என் மேலே இன்னும் கோபமா இருக்கியா? ஏன் ரெண்டு மாசமா என்னை avoid பண்றே? என்னால முடியலை பிருத்வி… ப்ளீஸ்! இப்படி அமைதியா பேசாம இருந்து என்னை கொல்லாத” என்று வாக்கியம் முடியும் போது குரல் உடைந்து அழ ஆரம்பித்தாள். பிருத்வி ஸ்வேதாவை கண்டுக்கொள்ளாமல் தம்மை இழுத்து புகை விட்டபடி விடுவிடுவென நடந்துக்கொண்டிருந்தான். ஸ்வேதா பெருமூச்சிறைக்க அவனுடைய வேகத்துக்கு ஈடுகொடுத்து பின்தொடர்ந்தாள்.
| மேலே படிக்கிறதுக்கு முன்னாடி... |
|---|
Pages: 1 2



